"டேக் கேர்" தலைவா! ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

  க.முகில்,

 காவேரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நல்லபடியாக போயஸ் கார்டன் திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை காண கொட்டும் மழையில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

  காரில் அழைத்துவரப்பட்ட ரஜினிகாந்த் வீட்டுக்குள் சென்றபோது அவரைப் பார்த்து தலைவா...தலைவா... "டேக் கேர் தலைவா" என்று ரசிகள் உற்சாகமாக கத்தினார்கள்.

 அனைவருக்கும் ஒரு கும்பிடு போட்ட ரஜினியை அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.