திருப்பத்தூர் போலீசாரை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டம்!

ம.பா.கெஜராஜ்
எருதுவிடும் திருவிழாவின் போது இளைஞர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தை செய்தி சேகரிக்க கேமிராவுடன் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட செய்தியாளர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்க போலீசார் முன்வரவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஏப்-2 ஆம் தேதி அன்று ஆர்பாட்டம் நடத்தவிருக்கின்றனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் திருவிழா சனிக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைப்பெற்றது.
இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின.
அப்போது அதனை வேடிக்கை பார்க்க ரஞ்சித் குமார் என்கிற வாலிபரை மாடு முட்டியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அதனை செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் பிரவீன் அப்பகுதி சார்ந்த மதன் என்பவர் தகாத முறையில் பேசி கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் காயமடைந்த பிரவீன் குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவங்களை அறிந்த காவல் துறையினர் மெத்தன போக்கை கையாண்டனர்.
ஆஸ்பத்திரிக்கு வந்து செய்தியாளரிடம் ஸ்டேட்மென்ட் பெற முன்வரவில்லை.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தாலும் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு அங்கு வந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி பத்திரிகையாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல சமாதானம் பேசினார்.
அதன்பின்பு அங்கிருந்து பத்திரிகையாளர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது டி.எஸ்.பி. செய்தியாளர் மற்றும் செய்தியாளரை தாக்கிய நபர் மீதும் கவுண்டர் கேஸ் போட சொன்னதால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் புகாரின் மீது எந்த நடவடிக்கையையும் போலீசார் எடுக்கவில்லை, ஆகவே இந்த விஷயம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நாளை 02.04.2025 ஆம் தேதி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒன்றினைந்து ஆர்பாட்டம் நட்டத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதில் சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூத்த செய்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.