தமிழ்நாட்டை வஞ்சிக்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது! முத்தரசன் பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டை வஞ்சிக்க  மத்திய அரசு செயல்பட்டு வருகிறது! முத்தரசன் பரபரப்பு பேட்டி!

ஜி கே சேகரன்,

தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்று உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது!  எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுவது போல் காட்சி இருந்தால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது! திருப்பத்தூரில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருப்பத்தூரில் பேட்டி.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வள்ளி மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு விழாவை தொடங்கி வைக்க வருகை புரிந்திருந்தார்.

  அப்போது திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பயணியர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

   அவர் தெரிவிக்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சமூக சேவை அமைப்பு என மோடி வருணித்து வருகிறார், அது நாட்டிற்கு மிகப்பெரிய பேராபத்து. ஆர்எஸ்எஸ்- ன் அஜெண்டா ஒரே நாடு ஒரே கொள்கை ஒரே கட்சி என்பது. மேலும் நாட்டில் எந்த கட்சியும் இருக்கக் கூடாது என படிப்படியாக பாஜக அரசு தன்னுடைய அதிகாரத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

 திமுகவை அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எதிர்க்க வேண்டும். ஆனால் மாநிலத்தின் மக்களை பலி வாங்கும் நோக்கில் குறிப்பாக  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை தமிழகத்திற்கு கொடுக்காமல்  பாஜக அரசு வஞ்சிக்கிறது.

  அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இயற்கை சீற்றத்தால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மனித உயிர்கள் பாதிக்கப்பட்டது, வீடுகள் சேதமடைந்தது. கால்நடைகள் மடிந்து போயின. அரசு திட்டங்கள் சீர் குழைந்து போனது.

   இதற்காக தான் தமிழக அரசு 37 ஆயிரம் கோடி நிதி கேட்டது. ஆனால் இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்று உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது மக்களின் வரிப்பணத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டு மக்களுக்கு எதிராக செயல்படுவது என்ன நியாயம்.

  எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுவது போல் காட்சி இருந்தால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறினார்.

 மேலும் திருப்பத்தூதில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு உரிய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.