5073 பேருக்கு துரைமுருகன் வழங்கிய பிரியாணி தொகுப்பு! தலா ரூ.200-ம் வழங்கினார்!

5073 பேருக்கு துரைமுருகன் வழங்கிய பிரியாணி தொகுப்பு! தலா ரூ.200-ம் வழங்கினார்!

கு.அசோக்,

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொருட்களை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.  இதற்கென வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூ.ரூ.43 லட்சம்  சொந்த பணத்தில் செலவிட்டார்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் சொந்த பணத்தில் ரூ.43 லட்சம் செலவிட்டு அரிசி ,பூண்டு ,வெங்காயம்,பட்டை, லவங்கம்.,நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்கி சமைத்து உண்ண ரூ.200 பணம் ஆகியவைகள் வழங்கப்பட்டது.

 இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 5073 இஸ்லாமிய மக்களுக்கு வழங்கினார் இவ்விழாவில் வன்னியராஜா உள்ளிட்டோரும் காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டனர்.

  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு இவை வழங்கப்பட்டது.