இளைஞர் கொலை!
கு.அசோக்,
கலவை அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!
இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கவியரசு(25), அருண்ராஜ்(25). இவர்களுக்கும் நாகலேரி கிராமத்தை சேர்ந்த சியான்(25), குகன்(25), ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்துள்ளது.
இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக நேற்று இரவு மீண்டும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்த அருண்ராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றும் மூவரும் பலத்த காயங்களுடன் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
