பெண் காவலர்களுக்கு செம சலுகைகள் தருவதாக விஜய் அறிவிப்பு!

பெண் காவலர்களுக்கு செம சலுகைகள் தருவதாக விஜய் அறிவிப்பு!

E.Mikel,

 TVK விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று திருப்பூரில் பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்வில், எதிர்பாராத சில பரபரப்பான தருணங்கள் அரங்கேறின.

 திருப்பூர் தாராபுரம் சாலையில் திரண்டிருந்த லட்சக் கணக்கான தொண்டர்கள், விஜய்யைக் கண்டதும் உற்சாக மிகுதியில் முழக்கங்களை எழுப்பினர். அவர் பேச முற்பட்டபோது, கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் தொடர் கூச்சலால் மைக்கில் அவர் பேசுவது யாருக்கும் கேட்கவில்லை.

 பலமுறை சைகை காட்டியும் கூட்டம் அமைதியாகாததால், விஜய் சற்று முகம் சுளித்தார்.

  ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஜய், மைக் பிடித்து, "நண்பர்களே.. கொஞ்சம் அமைதியா இருங்க! நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ் அமைதியா இருங்க" என்று சற்று கண்டிப்பான தொனியில் வேண்டுகோள் விடுத்தார்.

 தலைவரின் இந்தத் திடீர் டென்ஷனைப் பார்த்த தொண்டர்கள், அதன் பின்னரே ஓரளவு அமைதி காத்தனர்.

  தொண்டர்கள் அமைதியான பிறகு தனது உரையைத் தொடர்ந்த விஜய், இந்தச் சூழலிலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய புத்தகம் வரும் ஏப்ரல் 16-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.

  திருப்பூர் அவிநாசி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரை ஆற்றினார். அப்போது, "நான் மற்றவர்களைப் போலப் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன், எனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்" என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார்.

  குறிப்பாக, 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கான அதிரடி வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.

  பெண்காவலர்களுக்கு பாதுகாப்பு பணிகள் கிடையாது. வேலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் காவலர்களுக்காகவே பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.

  வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் மைதானத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

   அதில் சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமாரும் வெயில் காரணமாக திடீரென மயங்கி விழுந்தது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாவிட்டால் அல்லது தள்ளுமுள்ளு நீடித்தால், பாதுகாப்பு கருதி கூட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று டி.எஸ்.பி  தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 மேலும், விஜய் தொண்டர்களிடையே பேசும்போது பலத்த கோஷங்கள் எழுந்தன.