திருட்டு ஓட்டு போட்ட அதிகாரிகளை பிடித்துக் கொடுத்த மூதாட்டி! அலைகழிக்கப்பட்டதால் காவல் நிலையம் முற்றுகை!

திருட்டு ஓட்டு போட்ட அதிகாரிகளை பிடித்துக் கொடுத்த மூதாட்டி! அலைகழிக்கப்பட்டதால் காவல் நிலையம் முற்றுகை!

ஜி.குலசேகரன்,

 அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை அதிகாரிகளே செலுத்தியதில் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் புகார் அளித்த வாக்காளரை விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் அலைகழித்தனர். எனவே அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர்.

   வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான வாக்குப்பதிவில் திமுகவிற்கு ஆதரவாக  செயல்பட்ட இரண்டு தேர்தல் அலுவலர்கள் நாகலிங்கம் மற்றும் வேல்முருகன் ஆகியோர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 இந்நிலையில்,  இன்று விசாரணை என்ற பெயரில் வாக்காளரின் மனைவி மாணிக்கம்மாளை விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு காலையில் அழைத்து வந்தனர்.

 ஆனால் பல மணிநேரமாகியும் முதாட்டி மாணிக்கம்மாளிடம் விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் அலைகழித்துள்ளனர்.

  இதனை அடுத்து அதிமுக பாமக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிமுக அனைக்கட்டு தொகுதி வேட்பாளர் வேலழகன் தலைமையில் பாமக முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் மற்றும் பாமக மாவட்டத்தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

  இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.