சூப்பர் ஸ்டாரை சசிகலா ஏன் சந்தித்தார்!

ம.பா.கெஜராஜ்,
சசிகலாவை அதிமுக பக்கமே சேர்க்கமாட்டோம் என்று அக்கட்சியினர் தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்க, சசிகலாவோ பல்வேறு மூவ்களை நகர்த்தி அதன் செய்தியாகி வருகிறார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று மாலையே நடந்ததாம். ஆனாலும் அது பற்றி வெளியில் எந்த தகவலும் தெரியவில்லை.
அப்படியிருக்க மேற்படி சந்திப்பு இன்று சமூக ஊடகங்களில் இடம் பிடித்திருக்கின்றன.
இருக்கட்டும், ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று பலர் விணா எழுப்பாமல் இல்லை.
சமீபத்தில் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி, ஓய்வில் இருந்து வரும் நிலையில், நலம் விசாரிப்பதற்காகவும், மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அவர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருந்தார் அதற்கு வாழ்த்து தெரிவிக்கவுமே சசிகலா அவரை சந்தித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.
சரி....நம்பித்தானே ஆகனும்.