கட்டாய லஞ்ச வசூல்-15 வருடம் லைஃப்.... லாரி உரிமையாளர்கள் பாதிப்பு! 9-ஆம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தம்!
ஜி.குலசேகரன்,
வரும் 9 ஆம் தேதி முதல் தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் சங்கத்தின் பொதுசெயலாளர் சண்முகப்பா வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூரில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமானது தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் பொதுசெயலாளர் சண்முகப்பா தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா,கர்நாடகா,தெலுங்கானா,மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்செல்வக்குமார். துரைராஜ் ,தன்ராஜ் கோபால்,ஷமீர்,லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் லாரிகளின் எப்.சி கட்டணத்தை 850- ரூ.33040ஆக் உயர்த்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது 15 ஆண்டுகள் ஆன வாகனங்களை பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளது மிகவும் ஆபத்தானது.
அரசு வாகனங்களுக்கு இந்த 15 ஆண்டுகால உத்தரவு பொருந்தாது என தெரிவித்துள்ளனா.¢ இதுவே முரண்பாடானது.
இதனால் தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர், ஏற்கனவே சுங்கக்கட்டண கொள்ளை, சோதனை சாவடி என்ற பெயரில் கட்டாய லஞ்ச வசூல் டீசல் விலை உயர்வு உதிரி பாகங்கள் விலை உயர்வு இவற்றால் பாதிக்கப்பட்டு லாரி உரிமையாளர்கள் நலிவடைந்துள்ளோம்.
எனவே உத்தரவை வாபஸ் பெறும் வரையில் வரும் 9 ஆம் தேதி முதல் தென் மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். இதில் 12 லட்சம் லாரிகள் கலந்துகொள்வார்கள்.
இந்த லாரி வேலை நிறுத்தத்தால் ரேஷன் கடை பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் கலந்துகொள்வதால் பாதிப்பு ஏற்படும், மேலும் துறைமுகம் சரக்கு ரயிலில் கொண்டு வரப்படும் சரக்குகள் ஏற்றபடாது.
இதனால் எல்லா வகையான பொருட்கள் கொண்டு செல்வதும் பாதிப்படையும். பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும். அரசு அழைத்து பேசி ரத்து செய்து அறிவிப்பு வந்தால் மட்டுமே திரும்ப பெறுவோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும் தமிழக அரசு அறிவித்த எந்த அறிவிப்புகளையும் லாரி உரிமையாளர்களுக்கு செய்து தராமல் ஏமாற்றிவிட்டது இது எங்களுக்கு ஏமாற்றமே என்று சொன்னார்.

admin
