போலி மருத்துவர்கள் நிறைந்த திருப்பத்தூர் மாவட்டம்! படித்த டாக்டர்கள் அதிகம் பீஸ் புடுங்குவதால் சிக்கல்!

போலி மருத்துவர்கள் நிறைந்த திருப்பத்தூர் மாவட்டம்! படித்த டாக்டர்கள் அதிகம் பீஸ் புடுங்குவதால் சிக்கல்!

ஜி.குலசேகரன்,

ஐ டெக்னீசியன் மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

  திருப்பத்தூர்மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜோதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் அன்பரசு (50) ஐ டெக்னீசியன் படிப்பு முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஷமங்கலம் பகுதியில் ரூபன் கிளினிக் என்று மெடிக்கல் ஷாப் திறந்து உள்ளார். இந்த மெடிக்கல் ஷாப்பில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

 திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

 இந்நிலையில் அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது அங்கு ஒரு நபருக்கு அன்பரசு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

 மேலும் அன்பரசை மருத்துவர்கள் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 மருத்துவ அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் அன்பரசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இதில் மருந்துகள் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் மருந்தாளுனர்கள் குரு ராகவேந்திரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

  இது குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சீனியர் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில் போலி மருத்துவர்கள் மாவட்டம் முழுவதும் பெருகிகிடக்கிறார்கள். பல மெடிக்கல் ஷாப்புகளில் இந்த போலிமருத்துவர்கள் வைத்தியம் பார்க்கிறார்கள்.

 கிராம மக்களும் அவர்களை அதிகம் நாடி உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  மாவட்ட சுகாதார அலுவலர்கள் தான் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

 எல்லாம் சரிங்க டாக்டர் நீங்கெல்லாம் ஏகப்பட்ட பீஸை புடுங்கறதால தான் மக்கள் போலிடாக்டர்களை நாட வேண்டியிருக்கிறது!!!!!!?