108 ஆம்புலன்ஸ் கட்சி கூட்டங்களில் மட்டும் நிற்காமல் போகிறதே!
கு.அசோக்,
108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பழுதடைந்து சாலையில் நின்றதால் நோயாளிகள் வேதனை பட்டனர்.
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பென்ட்லாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கும் பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது அரசு மருத்துவமனை சாலையிலேயே 108 ஆம்புலன்ஸ் பழுதடைந்து நின்றதால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரசு மருத்துவமனை எதிரே 108 ஆம்புலன்ஸ் நின்றதால் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளிகளை இறக்கி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
108 ஆம்புலன்ஸ் கட்சிக் கூட்டங்களில் நடுவில் செல்லும் போது எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செல்கிறது ஆனால் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் போது மட்டும் பழுதாகி நிற்பது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

admin
