அரசு உதவி வழங்குவது எளிது ஆனால் தனியார்….? நாராயணி பீடத்தில் உதயநிதி!
.ஜி.கே.சேகரன்,
அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 500 நாடக கலைஞர்களுக்கு நிதி உதவியை துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் வழங்கினார்.
வேலூர்மாவட்டம், ஸ்ரீபுரம், திருமலைக்கோடி நாராயணி பீடத்தில் சக்தி அம்மாவின் 50 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 500 நாட்டுப்புற கலைஞர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று நடந்தது. ஸ்ரீபுரம் சக்தி அம்மா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது,
சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 500 கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆன்மீகம் மட்டுமில்லாமல் சமூக பங்களிப்பு வழங்கும் இடமாக ஸ்ரீ நாராயணி பீடம் உள்ளது . இங்கு நிகழ்ச்சிக்கு அழைத்தால், நான் வருவேனா வரமாட்டேனா என நினைத்தனர்?
கருணாநிதி , ஸ்டாலின் என்ன எண்ணத்தோடு வந்தார்களோ , அதே எண்ணத்தோடு வந்துள்ளேன். வேலூர் மாவட்டத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல் மருத்துவம் மற்றும் கல்வி உதவி செய்வதில் ஸ்ரீ நாராயண பீடம் சிறந்து விளங்குகிறது.
தற்போது தான் நாராயணி மருத்துவமனையில் அதிநவீன சி.டி., ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தேன். 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு அரசு செய்வது எளிது.
ஆனால் ஒரு தனியார் செய்வது மிக சவாலானது. சினிமாவுக்கு முன்பு கலைகளை பரப்பியவர்கள் நாட்டுப்புற கலைஞர்கள். அதில் வரலாற்று தகவல்கள் மிகுந்திருக்கும் அரசோடு இணைந்து 1995ம் ஆண்டிலேயே பள்ளி உட்பட்ட அமைப்புகளை மேம்படுத்த 2.5 கோடி ரூபாயில் நாராயணி பீடம் பணிகள் மேற்கொண்டது.
நாராயணி பீடம் சார்பில் 2008 ம் ஆண்டு 97 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் தற்போது அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் , வேலூர் எம்.எல்.ஏ.கார்த்திகேயன் , மாநகராட்சி மேயர் சுஜாதா, குடியாத்தம் எம்.எல்.ஏ., அமுலு விஜயன், ஆற்காடு எம்.எல்.ஏ., ஈஸ்வரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாராயணி மருத்துவமனையில் அதி நவீன ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார் இதில் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மகளிர் சுய உதவி குழுவினர் தங்களுடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் கட்டணமில்லாமல் 100 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ரூ18 கோடி மதிப்பீட்டில்புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் ,சுமார் ரூ 12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளுக்கு திறந்து வைத்தும், பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 49 ஆயிரம் பயனாளிகளுக்கு415 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவி அரசின் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,வேலூர் மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற மாவட்டம்வேலூர் கோட்டையில்ஜலகண்டேஸ்வரர் ஆலயம் கிறிஸ்துவ ஆலயம் மற்றும் மசூதி ஆகியவை இருப்பதால்வேலூர் கோட்டை உலக அளவில் புகழ் பெற்றது.
கோட்டை மட்டுமல்லாது வேலூர் மக்களும் மதசார்பின்மையற்றவர்களாக உள்ளனர். இதே போல் இந்தியா முழுவதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பு ஏற்றதும் மகளிர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தனியாக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் விடியல் பயணம் மூலம்820 கோடி முறைபேருந்துகளில் பயணம் நடை மேற்கொண்டு உள்ளனர்.
காலை உணவு திட்டத்தின் கீழ் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இதை பின்பற்றி பஞ்சாப் முதல்வர் தன்னுடைய மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 8 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை பார்த்து தெலுங்கானா முதலமைச்சரும் தன்னுடைய மாநிலத்தில் நிறைவேற்ற இருப்பதாக கூறி உள்ளார்.
எனவே தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் பிற மாநிலங்களிலும் நிறைவேற்றக்கூடிய வகையில் முன்னோடி திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.
மேலும் தமிழகத்தில் 19 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்ட வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.இந்த அடையாள அட்டை பயன்படுத்தி தமிழக முழுவதும் பேருந்துகளில் சுமார் 100 கிலோ மீட்டர்தொலைவிற்கு 25 கிலோ எடைஉள்ள மகளிர் தயாரித்த பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்யலாம்என்று அவர் பேசினார்.

admin
