நான்கரை லட்சத்தை அபகரித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு!

நான்கரை லட்சத்தை அபகரித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  ஆசிரியர் குடும்பத்தினரை மிரட்டி நான்கரை லட்சம் ரூபாவை அபகரித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

  இது பற்றின விவரம் வருமாறு,

  தூத்துக்குடி மாவட்டம் ஏழல் அருகே குறிப்பான்குளம் குப்பத்தை சேர்ந்தவர் சாலமன்.

  அவர் அரியநாயகபுரம் என்கிற கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

  இந்நிலையில் ஆசிரியர் சாலமனின் இளைய தம்பியான தேவராஜ் என்பவருக்கும் , சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

  இந்நிலையில் கடந்த ஆண்டு குறிப்பான்குளம் குப்பத்திற்கு சென்ற சென்னை வளசரவாக்கம் போலீசார், ஆசிரியர் சாலமனை விசாரணைக்கு அழைத்தனர்.

 தந்தையின் பணம் கொடுக்கல் , வாங்கல் பிரச்சனை தொடர்பாகவே இந்த விசாரணை என்று தெரிவித்து, ஆசிரியரை அங்கிருந்த வேனில் ஏற்றினர்.

  அப்போது வேனுக்குள் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

  அவர்கள் அனைவரும் சேர்ந்து சாலமனை மிரட்டினர். அவரது தம்பி தேவராஜ் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தினர்.

 பின்னர் சாலமனின் குடும்பத்தை மிரட்டி ரூ .4.5 லட்சம் ரூபாய் பணம் அபகரித்தனர்.

 இது தொடர்பாக சாலமன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

  சாலமன் அளித்த புகாரின் பேரில் சென்னை பேரில் சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, எஸ்.ஐ. ரமேஸ்கண்ணா, நிதி நிறுவன சிவகுமார் உள்ளிட்ட 6 பேர் மீது ஆள்கடத்தல், கொலைமிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.