எம்ஜிஆர் கையாண்டதை பின்பற்றாத தவெக! பக்கவாத்தியங்கள் எடுத்துரைக்கவில்லையா!

எம்ஜிஆர் கையாண்டதை பின்பற்றாத தவெக! பக்கவாத்தியங்கள் எடுத்துரைக்கவில்லையா!

 ம.பா.கெஜராஜ்,

  மக்கள் மத்தியில், எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல்  தவெக தலைவர் விஜய் கூட்டத்தை தொடங்குவதில்லை. அப்படியிருக்க கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அவர் எம்ஜிஆரின் டெக்னிக்கை கடைபிடிக்கவில்லையே என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.

  விஜய் யை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த சதி நடந்திருப்பதாக ஆரம்பத்தில் பல சமூக ஊடகங்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், முந்தைய காலங்களில் எம்ஜிஆர் பொதுக்கூட்டங்களுக்கு வந்த பொழுது அவர் கடைபிடித்த சின்ன சின்ன நூணுக்கங்கள் தற்போது வெளியாகி வருகிறது.

    தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் இருந்தாலும், மக்கள் எம்.ஜி.ஆரை பார்க்க ஒரு நாள் முன்பே கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து கூடிவிடுவார்கள்

  அவர் மேடைக்கு வரும்போது கூட்டம் ஆவலுடன் முன்னே அலைமோதி வந்தாலும், அதில் ஒரு ஒழுங்கு இருந்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். கையாண்ட நுணுக்கமான தந்திரங்கள்

    ஒரு கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் இருந்தால், கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ''முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேறட்டும். ஆண்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது'' அப்படியே நில்லுங்கள் என்று அறிவித்தார். பெண்கள் வெளியேறியதும், ''உங்களிடம் சொல்ல எதுவும் இல்லை.

   பெண்களும் குழந்தைகளும் நெரிசலில் சிக்காமல் இருக்கத்தான் அப்படி சொன்னேன்'' என்று சிரித்தபடி கூட்டத்தை நிறைவு செய்வார்.

   அதுமட்டுமின்றி கூட்டத்துக்கு கூட்டம் எம்.ஜி.ஆர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தினார்.

  இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு வைகோ பேசிய ஒரு வீடியோவும் தற்போது வைரலாகிறது. அதில் அவர், "50 ஆயிரம் பேர் கூடிய இடத்தில் ஒருவன் விழுந்தாலே, 20 பேருக்கு உயிரிழப்பு நேரலாம். அதனால்தான் நான் கூட்டத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கச் சொல்கிறேன்'' என்று எச்சரித்துள்ளார்.

   அவர் சொன்னதுபோல், சிறிய தவறே பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்பதை விஜய் கூட்டம் அரங்கேற்றி இருக்கிறது.

   அனுபவம் மிக்கவர்களை உடன் வைத்துக் கொள்ளாததே இந்த பதட்டமான சூழலுக்கு காரணம். தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்று ஆளாளுக்கு கடைவிரித்தால் இப்படித்தான் நடக்கும். சதி யோ சூழ்ச்சியோ, நீங்கள் மேலிடத்தை தொடும் பொழுது எதுவும் நடக்கலாம் என்பதை விஐய்க்கு அவரது பக்கவாத்தியங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.