குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எங்கே சார்?

குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எங்கே சார்?

கு.அசோக்,

 காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் - மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் - கட்டிடம் ஆங்காங்கே சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் அதனை புதுப்பிக்கவும் மக்கள் கோரிக்கை.

 இராணிப்பேட்டைமாவட்டம்,காவேரிப்பாக்கம் அருகேயுள்ள கொண்டாபுரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டிடம் உள்ளது இதில் சுமார் 30 மேற்பட்ட குழந்தைகள் வந்து பயின்று மதிய உணவை பெற்று செல்கின்றனர்.

 ஆனால் இந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடம் ஆங்காங்கே இடிந்து விழும் நிலையில் சிதிலமடைந்துள்ளது.

 அதில் குழந்தைகள் வந்து தங்கி செல்வதால் அபாயம் ஏற்படுவதற்கு முன்னர் கட்டிடத்தை புதுபிக்க வேண்டும் மேலும் இந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்திற்கு மின்சாரம் குடிநீர் வசதி கழிவறை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் கிராம மக்கள் கோருகின்றனர்.