வாழ்த்திய ரஜினிக்கு நன்றி சொன்ன விஜய்!

உ.சசிகுமார்.
அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு, ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என கேள்வி எழுந்தது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ரஜினிகாந்த், அவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
அதையறிந்த விஜய், இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு தொலைபேசியின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கட்சி தொடங்கியதற்கான காரணம் உள்ளிட்ட சில விஷயங்களை நடிகர் ரஜினிகாந்திடம் சொன்னாராம்.