தாய் கழகத்துக்கு திரும்பிய வி.ஜே.தேவா!

தாய் கழகத்துக்கு திரும்பிய வி.ஜே.தேவா!

த.நெல்சன்,

வேலூர் மாவட்டம், வேலூர் நகரைச் சேர்ந்தவா  வி.ஜே.தேவா,பி.ஏ.பிஎல் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்திவருவதுடன் இன்னிசை குழுவையும் செயல்படுத்தி வருகிறார். அப்படியிருக்க அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் வேலூர் மாவட்ட செயலாளராக இணைந்து பணியாற்றி வந்தார். பின்னாளில் அதிலிருந்து தன்னை விலக்கிகொண்டிருந்த அவர் தற்போது மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துள்ளார்.

 அந்த வகையில் அன்பு கிரான்ட், ஜான், விஜய்குமார், டேனியல்வேல், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோருடன் கட்சியின் பொதுச் செயலாளர் பிரிசில்லாபாண்டியன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

   மீண்டும் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களை பொதுச்செயலாளர் வரவேற்றார்.