நம்பாதீங்க! கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை!

நம்பாதீங்க! கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை!

 ம.பா.கெஜராஜ்,

 சமீபத்தில் கமல்ஹாசன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

  ஆனால் கமல்ஹாசன் இன்னும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை, 2 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகக் கூறும் புகைப்படம் வெளியாகி வரும் நிலையில், அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

  எம்என்எம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், "கமல்ஹாசன் இன்னும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. ஆனால், அவர் நலமாக இருக்கிறார். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என நம்புகிறோம்" என்றார்.

 "சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியது" என்று தெளிவுபடுத்தப்பட்டது.

 அவர் தற்போது சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 முன்னதாக, அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு தனக்கு லேசான இருமல் இருப்பதாக நடிகர் கூறியிருந்தார். "நான் மருத்துவமனையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கோவிட்-19 பரவல் மறையவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.