அதிமுகவில் இணைய திட்டமிட்டிருந்தவரை அலேக்காக தூக்கிய பாஜக!

அதிமுகவில் இணைய திட்டமிட்டிருந்தவரை அலேக்காக தூக்கிய பாஜக!

ஜி.சாந்தகுமார்,

 பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணை, ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா தொலைபேசியில் ஆபாசமாக திட்டி பேசிய ஆடியோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் மேற்படி இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

 இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து பாஜக நீக்கியது.

 இந்நிலையில் சூர்யா அதிமுகவில் சேரப்போகிறார் என்று தகவல்கள் வெளியாயின."திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்து கொள்கிறேன். அதிமுகவில் இணைவது உறுதி" என்றார்.

 இந்நிலையில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். 

 ஆகவே தான் வகித்து வந்த பதவியில் மீண்டும தொடர திருச்சி சூர்யா சிவா முடிவெடுத்துவிட்டாராம்.