செம்மரம் வெட்ட புறப்பட்ட மலைவாழ் மக்கள்! முதலாளி எஸ்கேப்!

கு.அசோக்,
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டுவதற்காக அரசு பேருந்தில் வந்த 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை - கத்தி ஆயுதங்கள் பறிமுதல்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பேருந்தில் செம்மரம் வெட்டுவதற்காக பத்துக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் வேலூரில் இருந்து கேஜிஎப் செல்லும் அரசு பேருந்து நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.
அதில் திருவண்ணாமலை ஜமுனாமத்தூர் மற்றும் திருப்பத்தூர் வேலூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த பாரதிராஜா, ராமச்சந்திரன், வெங்கடேசன், அண்ணாதுரை, குமார், மாணிக்கம், ராஜ்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, வெள்ளி, ஆகிய பத்து பேர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக கூலி வேலைக்கு சென்றது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் குடியாத்தம் போலீசார் அவர்களிடம் அவர்களை யாரும் அனுப்பியது என்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இருந்தாலும் முதலாளியை பிடிக்கவில்லை.
அரசு பேருந்தில் செம்மரம் வெட்ட சென்ற 10 பேரை பிடித்து சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.