கலைஞர் சிலை மீது மை வீச்சு அலட்சியமாக பதிலளித்த அமைச்சர் காந்தி! ஆவேசமான அமைச்சர் துரைமுருகன்!

கலைஞர் சிலை மீது மை வீச்சு அலட்சியமாக பதிலளித்த அமைச்சர் காந்தி! ஆவேசமான அமைச்சர் துரைமுருகன்!

 ஜி.கே.கே.சேகரன்,

கலைஞர் சிலை மீது மை வீசப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அலட்சியமாக பதில் அளித்து அமைச்சர் காந்தி  பேட்டி, அதே நேரத்தில் அமைச்சர் துரைமுருகனோ காளிப்பயல்கள் என்றூ ஆவேசப்பட்டார்.

  ராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்பு நடைபெற்ற முகாம் நிகழ்ச்சியை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி இறுதியாக செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.

  அப்போது அமைச்சர் காந்தி தெரிவித்ததாவது,  உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தேர்தல் காக தொடங்கப்பட்டு இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு நான்கு ஆண்டுகால திமுக அரசு திட்டங்கள் தேர்தலுக்காக நடத்தப்படவில்லை.

 தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டும் இன்றி இல்லம் தேடிக் கல்வி மக்களுடன் முதல்வர் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது.

  மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் விடுபட்ட நபர்கள் பயன்பெறு வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவித்தா£.

  ¢தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமல்ல தற்போது அதிமுக கட்சி மேற்கொண்டு வரும் தமிழகத்தை மீட்போம் என்ற பயணம் தேர்தலுக்காக நடைபெறுவதாக மறைமுகமாக சுட்டி காட்டி அது ஒன்றிற்கும் உதவாது என விமர்சித்தார் . நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் நடந்திருப்பவை என்னவென்று அதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் நடந்தவை என்ன என்றும் ஒப்பிட்டு  சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

  சேலம் பகுதியில் கலைஞர் சிலை மீது கருப்பு மை வீசப்பட்டு இருக்கும் சம்பவம் குறித்து கேட்ட கேள்விக்கு ஏதாவது நல்லதை கேளுங்கள் கலைஞர் சிலை மீது கருப்பு மை வீசியது ஒரு கேள்வியா ஊரில் இல்லாதவை குறித்து கேளுங்கள். அவன் இதை செய்தான் அதை செய்தான் என கேட்க வேண்டாம் என மறைந்த முதல்வர் கலைஞரை அவமதிக்கும் வகையில் அலட்சியமாக பதில் அளித்தார்

மக்கள் சார்ந்த குறைகள் மற்றும் தேவைகளை குறித்து மட்டும் கேளுங்கள் அரசு அதிகாரியிடம் சொல்லி செய்கிறேன் என பேசி நழுவினர்

    காளி பையன்.கலைஞர் சிலை மீது கருப்பு மையை பூசி உள்ளான். துரைமுருகன்  பேட்டி

   வேலூர் மாவட்டம் காட்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்துமகளிர் உரிமைத் தொகைபெறுவதற்கான மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மேயர் சுஜாதா,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

   நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கும்போது அதற்கு சாக்கு போக்கு சொல்லாமல்உடனடியாக நிவர்த்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட ஆட்சியர்கள் சரியாக இருந்தால் தான் அவர்களுக்குகீழ் இருக்கும் அதிகாரிகள்சரியாக செயல்படுவார்கள்.ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வழங்கப்படும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளது.

  அதற்கான தீர்வு ஏற்படவில்லை,எனவே பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களைஉடனடியாக பரிசீலினை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர்,திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்டி வைத்து மனுக்கள் வாங்கப்பட்டது அது என்னவாயிற்று என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு,அந்த மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  தற்பொழுது  உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மனுக்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

  சேலத்தில் கலைஞர் கருணாநிதி சிலை மீது கருப்பு மைவீசி உள்ளார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு,யாரோ ஒரு காளி பையன் கருப்பு மையை ஊத்தி இருக்கான் .நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்துவிடுங்கள் என தவெக தலைவர் விஜய் பேசியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கேள்வி கேட்பதற்கு கூட அவர் வரமாட்டாரமா என துரைமுருகன் கூறினார்.

   புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஓல்ட் ஸ்டுடென்ட் வகுப்பறையை காலி செய்ய மாட்டேங்கிறாங்க சீனியர்ஸ் அப்படின்னு சொல்லிட்டு ரஜினி பேசியது சர்ச்சையானது.இந்நிலையில் நேற்று வேள்பாரி புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது நான் இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசும்போது சீனியர்கள் தான் முக்கியம் என பேச வந்தேன் எல்லோரும் சிரித்ததால் அதை மறந்து விட்டேன்.

  எப்போதுமே ஒரு கட்சி ஒரு கழகம், ஒரு அமைப்புக்கு மூத்தவர்கள் ததான் ரொம்ப ரொம்ப முக்கியம் அவர்கள் தான் நம்மை வழிநடத்திச் செல்வார்கள் அந்த வகையில் ஒரு சீனியர் தான் ஒரு கட்சியோட ஒரு பில்லர் அவர்கள் தான் மில்லர் என்றதோடு மிகவும் பெரிய சிகரம் அப்படின்னு சொல்ல வந்ததை நிறைய பேரு ஏதேதோ போயிடுச்சு என ரஜினிகாந்த் கூறியிருந்தது குறித்து கேட்டதற்குஅவருக்கே நான் போன் பண்ணி பேசினேன் "ரொம்ப தேங்க்ஸ் சார் இப்பவாவது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று கூறினேன் என கூறினார்.