முஸ்லீம் பெண்களுக்கு நிதி கொடுத்த ஆட்சியர்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் சிறுதொழில் செய்ய உதவித் தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப, அவர்கள் இன்று (28.04.2022) வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மை சமுதாய முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அவர்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட வகை செய்யும் பொருட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
மேலும் சிறு தொழில் செய்யவும் அதாவது தையல் தொழில், சேமியா வியாபாரம், கணவரின் பேன்ஸி கடையை மீள தொடங்க, ரெடிமேட் கடை வைத்து வியாபாரம் செய்ய, காய்கறி விற்பனை செய்ய 1 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் 8 பயனாளிகளுக்க ரூ.80,000/- மதிப்பிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் திருமதி.பேபி இந்திரா உள்ளார்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.

admin
