ராமு-துரைமுருகன் வேட்புமனுதாக்கல்!

ராமு-துரைமுருகன் வேட்புமனுதாக்கல்!

கு.அசோக்,

 காட்பாடியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராமு ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

  வேலூர்மாவட்டம்,காட்பாடிவட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்தரிடம் இன்று திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும்  துரைமுருகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார் அவருடன் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

    இதே போன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் ராமு பாமக,பாஜக அமமுக ஆகிய கூட்டணி கட்சியினருடன் வந்து தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.