தமக்கு வழங்கிய சீட்டை தந்தைக்கு மடைமாற்றினாரா வினோத் காந்தி! அமைச்சரை பதறவிட்ட சம்பவம்!
கு.அசோக்,
தலைமை உத்தரவுப்படி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பதிவிடுவார்கள் - எனது மகனும் என்னுடன் தான் வந்தார் அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி.
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் அமைச்சர் ஆர்.காந்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
அமைச்சர் ஆர்.காந்தியின் மகனுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கி தலைமை அறிவித்த நிலையில் இன்று தனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க வாய்ப்பை தனது தந்தைக்கு வழங்குவதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அந்த கருத்து ராணிப்பேட்டை வட்டாரத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீண்ட சலசலப்புக்கு பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு கருத்தை பரப்பிக் கொண்டு இருப்பார்கள். தேவையற்ற சர்ச்சைக்கு பதிலளிக்க விரும்பவில்லை, எனது மகன் வினோத் காந்தியும் என்னுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளார்.
தலைமையின் உத்தரவுப்படி இன்று நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்தார்.
இராணிப்பேட்டை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். எனவே நடைபெற உள்ள தேர்தலில் திமுக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
வினோத் காந்தி

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் Udhayanidhi Stalin அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்.
வினோத் காந்தி
மாநில துணை செயலாளர்- திமுக சுற்றுசூழல் அணி

admin
