துரைமுருகன் மீது 2 வது வழக்கு! ராமுவும் சிக்கினார்!

துரைமுருகன் மீது 2 வது வழக்கு! ராமுவும் சிக்கினார்!

கு.அசோக்,

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிமுக வேட்பாளர் ராமு ஆகிய இருவர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்குபதிவு

 வேலூர்மாவட்டம்,காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் நேற்று வேட்பு மனுவை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார் அப்போது அவர் ஊர்வலமாக வந்ததுடன் பட்டாசுகளை வெடித்து போக்குவரத்தை இடையூறு செய்து தேர்தல் விதிமுறையை மீறியதாக அவர் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதே போன்று காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமு ஊர்வலமாக வந்து இதே காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

  இவரும் தேர்தல் விதியை மீறி பட்டாசுள் வெடித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

     ஏற்கனவே துரைமுருகன் மீது சில நாட்களுக்கு முன்னர் காட்பாடி ரயில் நிலையத்திலிருஈந்து வந்து அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றதால் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது இந்த நிலையில் மீண்டும் தேர்தல் விதி முறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் அவர் மகன் கதிர் ஆனந்த் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.