முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார் கொடுக்க வந்தவர்களை அதிமுக குண்டர்கள் தாக்கு!
ஜி.கே.சேகரன்,
முன்னாள் அமைச்சர், கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக, ஆட்சேபனை செய்ய வந்த நபர்களை அதிமுகவினர் அடித்துன் உதைத்தனர்.
வட்டாச்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கிய பரபரப்பு நிகழ்வு குறித்து உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும், திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் பேட்டி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று முன்னாள் அமைச்சரும், அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
வேலூரை சேர்ந்த தொழிலதிபர்களான, ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி, இவர்கள், முன்னாள். அமைச்சர், கே.சி.வீரமணி வேலூர் புதிய புதிய பேருந்துநிலையம் அருகே நிலம் வாங்குவது தொடர்பாக, பணம் மோசடி செய்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வழக்கு தொடுத்தனர்.

அதன் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், இதற்காக வரும் தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமசி தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், அதற்கு ஆட்சேபனை செய்ய வந்த ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி, ஆகியோரை கே.சி.வீரமணி ஆதரவாளர்கள், நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், வைத்து காவற்துறையினர் முன்னிலையில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் ராம மூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவரையும், வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து அழைத்துச்சென்றனர், அதனை தொடர்ந்து வட்டாச்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால், ஆய்வு மேற்க்கொண்டனர்,
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர், யாஷா முக்தால், இங்கு நடைப்பெற்ற நிகழ்வுகுறித்து, தேர்தல் நடத்தும், அலுவலர்கள், மற்றும் காவல்துறையினர், அளிக்கும் அறிக்கையின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியளித்தார்.

admin
