பள்ளிக்கூடத்தை சீரமைத்து மாணாக்களை பாதுகாத்திடுங்கள் ப்ளீஸ்!

பள்ளிக்கூடத்தை சீரமைத்து மாணாக்களை பாதுகாத்திடுங்கள் ப்ளீஸ்!

கு.அசோக்,

  சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வசதி, கழிவறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று  வருகின்றனர்.

  தற்போது ஒரே கட்டிடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

   அங்கு கூடுதல் வகுப்பறைக கட்டிடம் கட்ட  கடந்த ஆண்டு அருகில் இருந்த சேதமடைந்துள்ள கட்டிடத்தை அகற்றப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

   மேலும் மாணவ, மாணவிகள் நலன் கருதி உடனடியாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

  அதேபோல் மாணவர்களுக்கு கழிவறை வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர் சில ஆண்டுக்கு முன்னதாக கட்டப்பட்ட பழுதான  சுகாதாரமற்ற  நிலையில் உள்ள கழிவறை தான் தற்போது பயன்படுத்தி வவருவதாகவும் இந்த கழிவறைக்கும் தண்ணிர் வசதி ஏதும் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

  மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சுமார் 3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை அமைக்கப்பட்டு அதற்கான குடிநீர் தொட்டி கட்ட நான்கு தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

  அங்கு தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

  அதே போல் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் தூர் வாராதாலும் கழிவுநீர் வெளியேறாதலும் இலைகள் குப்பைகளை அழுகி துர்நாற்றம் வீசுவதோடு ஆயிரக்கணக்கான லார்வா புழுக்கள் உள்ளதாகவும், இதனால் அடிக்கடி மாணவர்களும், அப்பகுதி உள்ள பொது மக்களுக்கும் காய்ச்சல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

  எனவே ஊராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களின் நலன் கருதி குடிநீர் கழிவறை மற்றும் கால்வாய் சீரமைக்க வேண்டும்  என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

   நாங்கள் புலிப் பால் கேட்க்கவில்லைங்க...பள்ளிக்கூடத்தை சீரமைத்து மாணாக்களை பாதுகாத்திடுங்கள் ப்ளீஸ்.