ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம்! ஜாக்டோ ஜியோ வினர் ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம்! ஜாக்டோ ஜியோ வினர் ஆர்பாட்டம்!

 கு.அசோக்,

 வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ வினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

இராணிப்பேட்டை மாவட்டம்,

  இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலக சார்பாக ஜாக்டோ ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம்  வட்டாரத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டார்.

  பழைய ஓய்வூதியத் திட்டத்தினையேஅமல்படுத்திட வேண்டும்,இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைபள்ளித் தலைமைஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

  அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

   21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்  உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

   வேலூர் மாவட்டம்,  காட்பாடி மற்றும் வேலூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்  - உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்

   வேலூர்மாவட்டம்,காட்பாடி வட்டாட்ச்சியர் அலுவலக நுழைவாயிலில் ஜாக்டோ ஜியோவின் சார்பில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் ஆர்பாட்டமானது நடந்தது

   இதில் வட்டத்தலைவர் சுகுமாரன்,மாவட்டத்தலைவர் அல்போன்ஸ்கிரி ,ஜி.டி.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 அதே போல் வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலும் வேலூர் ஜாக்டோ ஜியோ வட்டத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ஜோஷி தலைமையில் ஆர்பாட்டமானது நடந்தது இதில் ராமமூர்த்தி.சேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.