காத்துக் கொண்டிருந்த ஓ.பி. எஸ். கொக்குவுக்கு வசமாக கிடைத்த மீன்!

உ.சசிகுமார்,
அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவு ஏற்பட்டவுடன் தன்னை எப்படியும் பாஜக தலைமை அழைக்கும் என்று போனையோ பார்த்து கொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு அடிச்சடு பாருங்க லக்கி பிரைஸ். அவரையும் அவருடன் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் நாளை மறுநாள் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச அழைத்துள்ளார்களாம்.
2024 மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்து பாஜகவின் தலைமைக்கு சுறுக்கு போட்டிருக்கிறது அதிமுக. இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளின் பக்கமும் சாய முடியாமல் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தற்போது பாஜக அமைக்கும் கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது.
அதை நம்பும்படியாவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் டெல்லிக்கு பாஜக தலைமை அழைத்துள்ளதாக தகவல் உள்ளது.