சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு!

கு.அசோக்,
போஸ்கோ சட்டம் குறித்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்தும் அரசு பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அனுமதிக்க கோரி வழக்கறிஞர்கள் சட்டக்கல்லூரி மாணவ,மாணவிகள் வேலூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் பயிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ரிபப்ளிக்கன் யூத் அசோசியேசன் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பில் சட்டம் பயிலும் சட்டக்கல்லூரி மாணவ,மாணவிகள் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை சட்டங்கள் மற்றும் போஸ்கோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ரிபப்ளிக்கன் யூத் அசோசியேசன் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்க கோ£யிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரும் அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.