மலைப்பகுதியில் நிர்வாண கோலத்தில் பெண் கொலை! எஸ்.பி.நேரடி விசாரணை!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியைச் சார்ந்த சாம்பசிவம் மனைவி சின்னகாளி (42) என்பவரின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவரின் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில்,சின்னகாளி தனிமையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவரின் விவசாய நிலத்தில் நேற்று சின்னகாளி தலையில் பலத்த காயத்துடன் நிர்வாண கோலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார் இறந்த சின்னகாளியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தீவிர விசாரணை மேற்கொண்டார். பின்னர் சின்னக்காளியின் உடலை பிரோத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் கொலை செய்த நபர் யார்?. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதூர் நாடு மலைப்பகுதியில் நிர்வாண கோலத்தில் உயிரிழந்த பெண்ணால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

admin
