குறட்டை விடும் உணவுபாதுகாப்பு அதிகாரிகள்! கோழிக்கறியில் பூச்சி!

குறட்டை விடும் உணவுபாதுகாப்பு அதிகாரிகள்! கோழிக்கறியில் பூச்சி!

கு.அசோக்,

எண்ணெயில் பொரித்து எடுத்த கோழி இறைச்சியுடன் புழுக்களையும் சேர்த்து சாப்பிட கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் செவிலியர்

  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில்  ஆர்.எம் கோழி இறைச்சி மற்றும் மீன் இறைச்சி பக்கோடா கடை செயல்பட்டு வருகிறது.

   இந்த கடையில் அதே பகுதியில் வசிக்கும் அர்ச்சனா என்ற செவிலியர் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வாங்கி கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது சிக்கன் இறைச்சியுடன் புழுவையும் சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுத்து இருப்பது தெரியவந்தது.

  இதையெல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குறட்டைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 "புகார் கொடுத்தாலே நடவடிக்கை எடுப்பதில்லை".