அதிமுக அழிந்துவிடாமல் தடுக்கவே இபிஎஸ் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்துள்ளார்! டிடிவிதினகரன் பேட்டி!

கு.அசோக்,
அதிமுக அழிந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியாக தான் இபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்திருக்கிறார்' தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி வருவதால், பயத்தில் மாநில உரிமை போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது என டிடிவிதினகரன் பேசினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுபெற வேண்டும் என்று கூறியிருந்தேன். அதுதான் தற்போது நடந்துள்ளது.
திமுக என்ற மக்கள் விரோத ஆட்சியை எந்த கட்சி முடிவுக்கு கொண்டு வர எந்த கட்சிகள் எல்லாம் முனைப்போடு இருக்கிறார்களோ அவர்களெல்லாம் எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அது விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.திமுகவில் பெரும்பாலானவர்கள் பிக் பாஸ் ஆட்டிட்யூட்டில் அறிவாளிகள், எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசி வருகிறார்கள்.
கருணாநிதி அவர்கள் காலம் தொட்டு தொடர்ந்து வருகிறது. யாரையும் மதிப்பதில்லை. பெண்களை சமமாக மதிப்பதில்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவர்களை அடித்து துன்புறுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களும், அனைத்து தரப்பு மக்களும் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதியாகிறது". "என் கவுண்டர் என்ற மனித உரிமை மீறலை எப்படி பார்க்கிறீர்கள்?" : சில சூழ்நிலைகளில் தற்காப்புக்காக செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
அதை நியாயப்படுத்தவில்லை, அதே நேரத்தில் காவல் துறை தன் கடமையை செய்ய வேண்டும். மனித உரிமை மீறல் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் பேசினாரே:அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை எல்லாம் திரும்ப பெற்று கூட்டணிக்கு வருவது எதார்த்தம். மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதி பல தலைவர்கள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதை போல் தான் இதையும் பார்க்க வேண்டும்.
மாநில உரிமை மீட்பு குழுவை அமைத்துள்ளார்களே: திமுக ஆட்சியில் இருந்தபோது கட்ச தீவு என்ற தமிழ்நாடு உரிமையை விட்டுக் கொடுத்தவர்கள். காவிரி பிரச்சனையில் ஒப்பந்தத்தை காலாவதியாக விட்டவர்கள் திமுகவினர். நீட் தேர்வு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் வந்தது.
தமிழக மக்களை வாட்டி வதைக்கின்ற மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான். இதையெல்லாம் திசை திருப்புவதற்காகவும், தேசிய ஜனநாயக கூட்டணி நாள் தோறும் பலப்பட்டு வருவதாலும் பயத்தில் இது போன்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி வருகிறார்கள் என்பது தான் உண்மை.
உங்களை கட்சியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி அழைத்தால் போவீர்களா: உங்களுடைய கற்பனைக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிச்சாமி கையில் அதிமுக இருக்கும் வரை வீழ்ச்சியே இருக்கும் என்று நீங்களே கூறி இருந்தீர்களே ஆமாம். அக்கட்சி அழிந்து விடாமல் காப்பாற்றும் முயற்சியாக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்திருக்கிறார்," என்று கூறினார்.
பேட்டியின் போது முன்னால் எம்பி சி.கோபால், முன்னாள் அமைச்சர் கோ.பாண்டுரங்கன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பார்தீபன் மற்றும் காட்பாடி எஸ்.ராஜா உள்ளிட்டவர்கள் இருந்தனர்.