சி.எம். தங்கும் சுற்றுலா மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்! புரோக்கர் அதிகாரிகளால் பரபரப்பு!!

சி.எம். தங்கும் சுற்றுலா மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்! புரோக்கர் அதிகாரிகளால் பரபரப்பு!!

 கு.அசோக்,

 வேலூரில் விவசாயிகள் அரசு ஒழுங்குமுறை கூடத்தில் நெல் கொள்முதல் செய்ய வெளிப்படையான ஏல முறையை கோரியும் கட்டணம் சேமிப்பு கிடங்கிற்காக வசூலிப்பதை கண்டித்தும் விவசாயிகள் மறியல் நடத்தினர்.

   வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணா சாலையில் டோல்கேட் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.

  தமிழ் நாடு அரசின் மாவட்ட விற்பனை குழுவின் கட்டுபாட்டில் உள்ள இங்கு வேலூர் கணியம்பாடி ஊசூர் அனைக்கட்டு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து நெல்,பயிர் வகைகள் நிலகடலை , தேங்காய் கொப்பரைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விவசாயிகள் நாள்தோறும் கொண்டு வந்து விவசாயிகள்  விற்பனைக்கு வைக்கின்றனர்.

   ஆனால் இங்கு ஏல முறையில் நெல் உள்ளிட்ட பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் ஆனால் வியாபாரிகள் கூட்டணி அமைத்து வெளிப்படை தன்மையில்லாமல் ஏல முறையில் 2 ஆயிரம் நெல்லை வெறும் 1600- 1700 வரை எடுக்கின்றனர்.

   இதன் மூலம் விவசாயிகளுக்கு மூட்டை ஒன்றிற்கு ரூ.200 முதல் ரூ.300 வரையில் நஷ்டம் ஏற்படுகிறது இந்த வியாபாரிகள் கூட்டணி திட்டத்திற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர்.

  எனவே நெல்லிற்கான அடிப்படை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் இந்த ஏல முறையில் கூட்டணி அமைத்து ஏலம் எடுப்பதை தடுக்க வேண்டும்.

  இந்த நோக்கத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்பதால் அந்த விளை பொருட்களை கிடங்குகளில் வைத்து விற்கும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது.

  ஆனால் 15 நாட்களுக்கு மேல் ஆனால் விலை பொருட்கள் வைத்துள்ளதற்கு வாடகை வசூலிக்கின்றனர் அதனை தடுக்க வேண்டும் மேலும் விளை பொருட்களுக்கான கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகைக்கு நாட்களை கடத்தாமல் வியாபாரிடம் பணத்தை வசூலித்து உடனடியாக வியாபாரிகளுக்கு அளிக்க வேண்டும்.

  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரில் வேலூர் - தொரப்பாடி சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

   நாளை வேலூருக்கு தமிழக முதல்வர் வந்து தங்கவுள்ள சுற்றுலா மாளிகை எதிரில் இந்த திடீர் போராட்டத்தால் சுற்றுலா மாளிகையில் தங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.