உள்ளூர்காரர்களுக்கு மனை இல்லையா?

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே தமிழகம் - ஆந்திரா செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய வந்ததால் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வெளியூரில் உள்ள ஆட்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதில் உள்ளூர் ஆட்களுக்கு வழங்கவில்லையாம்.
வருவாய்த் துறையினரிடம்¢ மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய வந்ததால் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரம்யா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.