துண்டான கையை இணைத்து சாதனை புரிந்த டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்கள்!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடி அருகே கல் அறுவை இயந்திரத்தில் துண்டான வாலிபரின் கையை இணைத்து சாதனை படைத்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாராப்பட்டு பகுதியில் கல் அறுவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலம் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(20) என்ற இளைஞன் பணியாற்றி வந்துள்ளார்.

   இவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கல் அறுவை இயந்திரத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது இயந்திரத்தில் சிக்கி அவரது இடது கை தோள்பட்டை கீழ் முழுவதுமாக துண்டாகிப் பிரிந்தது.

   உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை சக பணியாளர்கள் மீட்டு  வாணியம்பாடி டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

   அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் டேவிட் விமல் குமார், ராஜ்குமாரை அவசர பிரிவில் அனுமதித்து மருத்துவ பணிகள் தொடங்கப்பட்டது.

  மயக்க மருத்துவர் தினேஷ், எலும்பு முறிவு பகுதி நேர தலைமை மருத்துவர் டேவிட் விமல் குமார், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் கே.எம்.பாலாஜி ஆகிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை  மேற்கொண்டனர்.

  மொத்தம் 7 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் போது துண்டாகிய கையின் எலும்புகள் மீண்டும் இணைக்கப்பட்டு, நரம்புகள் மற்றும் தசைகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டன.

   இரத்த நாளங்கள் கூட மைக்ரோ சர்ஜரி முறையில் நுண்ணோக்கி வழியாக இணைக்கப்பட்டன. தோல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு கைக்கு இயல்பு தோற்றம் மற்றும் செயல்பாடு கிடைக்குமாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

   இது குறித்து டாக்டர் ஜே.டேவிட் விமல் குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-இது மிகவும் சவாலான சிகிச்சை. கை முற்றிலும் துண்டாகியிருந்ததால், ஒவ்வொரு நொடியும் நோயாளியின் உயிரை தீர்மானிக்கும் சூழ்நிலை இருந்தது.

   எங்கள் மருத்துவ அணியின் ஒருங்கிணைந்த முயற்சியால், கையை மீண்டும் உயிரோட்டத்துடன் செயல்படச் செய்ய முடிந்தது.

  எதிர்காலத்தில் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றார். வெற்றிகரமாக சிதைவுற்ற சிறைகள் மற்றும் தமனிகள் இரண்டுமே சீரமைக்கப்பட்டது. டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அதிவிரைவு அறுவை சிகிச்சையின் காரணமாக பாதிக்கப்பட்ட கையில் கிரிட்டிக்கல் இஸ்கினியா டைம் (நீக்ஷீ௴வீநீணீறீ றீவீனீதீ வீ௳நீலீமீனீவீணீ ௴வீனீமீ) என்பதற்குள் கை இணைப்பு அறுவை சிகிச்சை ஆரம்பம் செய்யப்பட்டது.

   இதன் விளைவாக அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது.ரத்த நாளங்கள் சரி செய்த பின்னர் பிற அமைப்புகளை சரி செய்தல் ஒன்றின் பின் ஒன்று அறுவை சிகிச்சைகளாக செய்வது வழக்கம் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் இணைக்கப்பட்ட கையினால் அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டது.

  சென்னை, வேலூர், பெங்களூர் போன்ற பெருநகர மருத்துவமனையில் மட்டுமே சாத்தியமான இந்த கடினமான அறுவை சிகிச்சை வாணியம்பாடி டேவிட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெற்றியுடன் செய்யப்பட்டது.நோயாளி  உடல்நிலை தற்போது நிலையாக உள்ளது. கையில் உயிரோட்டம் சீராக உள்ளது. விரைவில் அன்றாட செயல்பாடுகளை கையால் செய்யும் நிலை ஏற்படும் என்று அவர் சொன்னார்.