மணமக்களுக்கு பட்டுவேட்டி பட்டுச்சேலை வழங்கப்படும்:- எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!
கு.அசோக்,
இராணிப்பேட்டைமாவட்டத்தில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
முதலில் ராணிப்பேட்டை தொகுதியில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ராணிப்பேட்டை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெறப்போகிறார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும், தீபாவளிதோறும் சேலை வழங்கப்படும். தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடரும், மணமகனுக்கு பட்டுவேட்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை கொடுக்கப்படும். எனப்பேசினார் .
மேலும்,
ராணிப்பேட்டைமாவட்டம் வேலூர் 20-8-25
தமிழருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பெருமையை கனிமொழி ஆர்.எஸ்.எஸ். என கூறி எதிர்க்கிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்று வரும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் பங்கேற்க ராணிப்பேட்டைக்கு வருகை தந்த அவருக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சு.ரவி தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழகத்தை சேர்ந்த ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த பதவி கிடைக்க உள்ளது. இது தமிழர்களுக்கு மிக பெருமை. ஆனால் அதனை கனிமொழி எதிர்க்கிறார், வாக்களிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை அவரை ஆர்.எஸ்.எஸ். என கூறுகிறார். அப்படியென்றால் 1999ல் பாஜகவோடு திமுக கூட்டணி வைத்தது எனில் கனிமொழியும் ஆர்.எஸ்.எஸ். தான் என காட்டமாக தெரிவித்தார்.சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அவர், சோளிங்கரில் பைபாஸ் சாலை, பிற நகரங்களுக்கு பேருந்து சேவை, மருத்துவமனை விரிவாக்கம் என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என முழங்கியதோடு கூறி உரையை நிறைவு செய்தார்.

admin
