ரோடு யாருக்கு! மாட்டுக்கா? மனுஷனுக்கா?!

ரோடு யாருக்கு! மாட்டுக்கா? மனுஷனுக்கா?!

ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் புற வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையிஷ   சாலையை வழிமறிக்கும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா. ¢விபத்து ஏற்படுவதற்கு முன்பு, நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேரணாம்பட்டு செல்லும் புறவழிச் சாலையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

   இந்த நிலையில் அவ்வழியாக  செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து இருசக்கர வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் கால்நடைகள்  சாலையை வழிமறித்து சுற்றித் திருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

  மேலும் பள்ளி அருகாமையில் சுற்றித் திரிவதாலும்  மாணவர்கள் சற்று அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். ஆகையால் துறை சார்ந்த நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்த நிலையிலும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்