பறையடித்து மகிழ்ந்த எம். எல். ஏ.!
ஜி.கே.சேகரன்,
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 4.25 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போட சென்றபோது பறையை வாங்கி அடித்த சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றிய உட்பட்ட காகனம்பாளையம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக அப்பகுதிமக்கள் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 4.25 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டது.
அதற்காக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி வந்தபோது அப்பாகுதி மக்கள் அவருக்கு பறையடித்து வரவேற்பு அளித்தனர். அப்போது எம்எல்ஏ நல்லதம்பி நீங்கள் மட்டும்தான் பறையை அடிப்பீர்களா எனக்கூறி பறையை வாங்கி அடித்தார்.

admin
