அரசு அதிகாரிகளின் ஆசை வார்த்தையால் நடுத்தெருவில் நிற்கவைக்கப்பட்ட அப்பாவிகள்! பெட்ரோல் குண்டு வீச்சு!

அரசு அதிகாரிகளின் ஆசை வார்த்தையால் நடுத்தெருவில் நிற்கவைக்கப்பட்ட அப்பாவிகள்! பெட்ரோல் குண்டு வீச்சு!

கு.அசோக்,

 நெமிலி அருகே ஐ.எப்.எஸ். என்கிற நிதி நிறுவனத்தின் துணை ஏஜென்ட் வீட்டில் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி குண்டு வீசிய சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மர்ம நபர்களை நெமிலி போலீசார் தேடி வருகின்றனர்.

 இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, சயனபுரம், வடகண்டிகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஐஎப்எஸ் என்றகிற நிதி நிறுவனத்தில் தங்களது நிலத்தை விற்றும்வீட்டை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் முதலீடு செய்தனர்.

   இந்த நிதி நிறுவனத்தில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறப்பட்டது.  அதேபோன்று சில மாதங்கள் வட்டியும் தரப்பட்டது. பின்னர் அதன் முதலாளிகள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

   இதற்கு ஏஜெண்டுகளாக அரசு அதிகாரிகளே இருந்து வந்தனர்.

    இந்நிலையில்  இதற்கு துணை ஏஜென்ட் ஆக வடகண்டிகை பகுதியை சேர்ந்த அருண் (42) என்பவர் செயல்பட்டார்.

  இந்நிலையில் அவரது வீட்டில் நள்ளிரவில் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி குண்டு ஒன்று வீசப்பட்டது.  இது வெடித்து சிதறிய போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லை.   

   அதே நேரம் இந்த பெட்ரோல் குண்டு வீசியதில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படவில்லை.

  இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ஒருவர் அருணிடம் ரூ.10 லட்சம் வட்டிக்கு கொடுத்துள்ளார் . அதில் ரூ.லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி தரப்பட்டுள்ளது.  மீதி பணம் திருப்பி தரவில்லை. 

   அதற்குண்டான வட்டி பணத்தை தருமாறு பல தடவை கேட்டும் அவர் தராததால் ஆத்திரத்தில் அருண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது.  சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய போலீசார் சென்னை கோயம்பேடு விரைந்துள்ளனர்.

 இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.