தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றும்!

ஜி.சாந்தகுமார்,
லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்கிற பெயரில் தேர்தல் தோறும் கருத்துக்கணிப்புகள் வெளியாகும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேராசிரியர் ராஜநாயகம் டீம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேராசிரியர் ராஜநாயகம் தெரிவிக்கையில், "மக்கள் ஆய்வகத்தில் முறையான பயிற்சி பெற்ற 18 ஆய்வு நெறியாளர்களும் 85 கள தகவல்கள் சேகரிப்பாளர்களும், மார்ச் 25 முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தின் 39 தொகுதிகளில் 4485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பு நடத்தி கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது.
இதில் திமுக கூட்டணி 41 சதவீத வாக்குகளும் அதிமுக 24 சதவீதமும், பாஜக 17 மற்றும் நாம் தமிழர் 12.8 சதவீத வாக்குகளை பெறும் என கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று திமுக கூட்டணி அதிகபட்சம் 37 தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி தலா 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்று சொன்னார்.