நீர் நிலைகளை ஆக்கிரமனம் செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்!
ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம் கனிக்கனியான் ஊராட்சி கனிக்கனியான் களம் புறம்போக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதி உள்ளது. தற்பொழுது நீர்பிடிப்பு பகுதி குளம், களம் புறம்போக்கு காணவில்லை.
ஏற்கனவே எரிமண் செங்கல் சூளைகளுக்கு லாரி லாரியாக கடத்தப்பட்ட நிலையில், களம் புறம்போக்கு, நீர் பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்க, பிளாட் போட்டு விற்பனை செய்ய ஏற்படுகளை செய்து வருகின்றார்கள்.
இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை, வேலூர் தாசில்தார், கனிக் கனியான் கிராம நிர்வாக அலுவலர், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனைத்தும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் , என தெரியவில்லை! கும்பகர்னைன போல தூங்கி விட்டார்களா? என மக்கள் கேளிவி எழுப்புகிறார்கள்.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பின் அரசாணை 540 மற்றும் 64 யின் படி நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால் நீர்நிலை ஓடைகளில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்கள் குடியிருப்புகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த களம் புறம்போக்கு, நீர் வழி குளத்தை மூடி பிளாட் போட்டு வியாபாரம் செய்வதை வேலூர் மாவட்ட ஆட்சியர் தடுத்து நடவடிஒக்கை எடுக்க வேண்டுகின்றனர் கணிகனியான் ஊர் பொதுமக்கள்.

admin
