தெலங்கானாவில் எழுந்த மார்வாடி எதிர்ப்பு அலை!

தெலங்கானாவில் எழுந்த மார்வாடி எதிர்ப்பு அலை!

வி.டி.வித்யாசாகர்,

தெலங்கானாவில் மார்வாடிகளை  வெளியேற்றும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

   அண்மையில் நடைபெற்ற  'Marwadi Go Back' பேரணி  தெலுங்கானாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  சமூக ஊடகங்களிலும்  பேசு பொருளாகி விட்டது.

    கடந்த மாதத்தில் செகந்திராபாத் நகரில் மொண்டா சந்தையில் கார்  நிறுத்தம் பகுதியில்  தெலங்கானாவில் உள்ள பட்டியல் இனத்தவருக்கும், அங்கு குடியேறிய மார்வாடிகளுக்கும் ஏற்பட்ட  மோதலே இதற்குப் பின்னணி என்று கூறப்படுகிறது. அங்கு தொடங்கிய மார்வாடி எதிர்ப்பு  படிப்படியாக பரவத் தொடங்கியது.

   குறிப்பாக, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அமங்கல் நகரில் உள்ள உள்ளூர் சிறு வணிகர்கள் மார்வாடிகளின் வணிக  ஆதிக்கத்தால் கடும் பாதிப்படைந்து உள்ளனர். அங்கு மார்வாடிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்து உள்ளூர் மக்களின் தொழிலை கைப்பற்றி விட்டனர்.

   மார்வாடிகளுக்கு எதிராக உள்ளூர் வணிகர்கள் ஆகஸ்ட் 18 இல் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மார்வாடிகளிடம் பணம் வாங்கி பிழைப்பு நடத்தும் சில தலைவர்களின் தலையீடு காரணமாக முழு அடைப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது.

   அதன்பிறகு ஹைதராபாத் பாத் நகரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில்,  வெளி மாநிலத்தவர்கள் இங்கு நடத்தும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் 89 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  தெலுங்கானா கிராந்தி தள தலைவர் சங்கம் ரெட்டி பிரிதிவிராஜ் அவர்கள் கூறியதாவது:

 "உள்ளூர் வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு தெலுங்கானாவைச் சேராத வெளி மாநிலத்தவர்கள் மநிலம் வாங்குவதைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், குஜராத்தி மற்றும் மார்வாடி  வணிகர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்றும், அத்தகைய வணிகர்கள் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் ,

ஐந்து இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மார்வாடிகளுக்கு தொழில் உரிமம் அளிக்கக் கூடாது" என்றும் கூறியுள்ளார்.

  தெலுங்கானாவில் ஆந்திராவைக் காட்டிலும் அதிகமான வணிக நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக மார்வாடிகள்  இனிப்பு விற்பனைக் கடைகளை அதிகம் வைத்துள்ளனர்.

   ஹைதராபாத் நகரில் அமீர்கோட்டை கூக்கட்பள்ளி, ஷெரிலிங்கம்பள்ளி, மல்காஜ்கிரி, கோட்டி, அபிட்ஸ், நாம்பள்ளி ஆகிய இடங்களில் மார்வாடிகள் அதிகம் பரவி விட்டதாக தெலுங்கானா மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

   மார்வாடிகளுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால்  நிரந்தரமாக தங்கி விடும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறுகின்றனர்.

   தமிழ்நாட்டில் 1950 க்குப் பிறகு வடவர்  கடைகள் எதிர்ப்பு இயக்கத்தை திராவிட இயக்கத்தினர் கையில் எடுத்தனர்.

   வடவர் இல்லாமல் தமிழருக்கு வாழ்வில்லை என்பதுதான் திராவிட இயக்கங்களின் தற்போதைய முழக்கமாகும்.

  திராவிட மண், பெரியார் மண் என்று பேசுபவர்கள் ஓட்டு வாங்குவதற்காக சௌகர் பேட்டைக்குப் போய் இந்தியில் சுவரொட்டி ஒட்டுவதும்மார்வாடி வணிகர்கள் சங்கங்களிடம் போய் மடியேந்தி ஓட்டுப் பிச்சை எடுப்பதுமான அறுவெறுக்கத்தக்க நிலைக்குப் போய் விட்டார்கள்.

   வெளியாரை வெளியேற்றாமல் தமிழருக்கு வாழ்வில்லை என்பதுதான்

தமிழ்த்தேசிய இயக்கங்களின் இன்றைய முழக்கமாக கட்டாயம் இருக்க வேண்டும்.

  தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே, வெளியாரை வெளியேற்று, உள் அனுமதிச்சீட்டு முறையை அமல் படுத்து போன்ற முழக்கங்களே மார்வாடிகள் உள்ளிட்ட வடவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும்.

 தெலுங்கானா மக்கள் தொடங்கி இருக்கும் "மார்வாடிகளே வெளியேறு" போராட்டம் வெல்ல வாழ்த்துகள்! என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வந்துள்ளன.