இளைஞர்களை ஓட ஓட விரட்டி முத்தம் கொடுத்த பெண்கள் யார்!

இளைஞர்களை ஓட ஓட விரட்டி முத்தம் கொடுத்த பெண்கள் யார்!

ம.டெல்லிராஜன்,

  திருப்பூரில் சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே 2 வாலிபர் களும், இளம்பெண்களும் நள்ளிரவில் நடந்து சென்றனர்.

    அப்போது திடீரென ஒரு இளம்பெண் சத்தமாய் 'ஏய்... ஓடாத...ஒரு நிமிஷம் நில்லு.. ஒரு முத்தம் தரேண்டா வாங்கிக்கோ!' என்று தன்னுடன் வந்த வாலிபரை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

   ஆனால் அவரை அந்த இளம்பெண் விட வில்லை. விரட்டி, விரட்டி அவரை மடக்கி பிடித்து காதல் வசனம் பேசி மயக்கினார். இதேபோல் இன்னொரு இளம்பெண்ணும், வாலிபரை நெருங்கி வந்தார்.

   நள்ளிரவில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த சம்பவம் தற்போது போலீசாரின் பார்வைக்கு சென்றுள்ளது

    இந்த அத்து மீறலில் ஈடுபட்டது காதல் ஜோடியா? அல்லது விலைமாதுக்களின் சில்மிஷமா என்று போலீசார் கண்டுபிடிக்கவில்லை.

   வேலை தேடி திருப்பூருக்கு வரும் இளைஞர்களை குறிவைத்து இளம்பெண் கூட்டம் ஒன்று பணம் பறிக்கும் நோக்கத்தில் இரவு நேரங்களில் சுற்றி வருவதாக புகார் உள்ள நிலையில் இந்த சங்கதி நடந்திருக்கிறது.