போலி இன்சூரன்ஸ் மூலம் கோடிகள் கொள்ளை! கண்டுபிடித்த இன்சூரன்ஸ் கம்பெனி!!

ம.பா.கெஜராஜ்,
போலி இன்சூரன்ஸ் மூலம், நாடுமுழுவதும் பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
இது பற்றின விவரம் வருமாறு,
இன்சூரன் என்பதை காப்பீடு என தமிழில் அழைக்கிறார்கள். அப்படி இந்த காப்பீடானது விபத்தில் சிக்கி உயிர் இழப்பவர்களின் குடும்பத்துக்கும், விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் பிழைத்தவர்களுக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்க வேண்டும்.
அதற்கு விபத்தை ஏற்படுத்துபவர்களின் வாகனங்களுக்கு முறையாக இன்சூரன்ஸ் கட்டி இருக்க வேண்டும். அந்த வாகன இன்சூரன்சை அடிப்படையாக வைத்துதான் கோர்ட்டு மூலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குரிய இழப்பீட்டு தொகையை பெற முடியும்.
ஆனால் சமீபகாலமாக வாகன விபத்தில் சிக்கியவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் உண்மையாக இன்சூரன்ஸ் தொகை கட்டாமல், கட்டியதுபோல போலியான இன்சூரன்ஸ் சான்றிதழ்களை கொடுத்து தப்பிச்சென்று விடுகிறார்கள்.
இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உரிய இழப்பீட்டு தொகை பெறமுடியாமல் போக வாய்ப்பு உள்ளது. கார் வைத்திருப்பவர்கள், காருக்கான இன்சூரன்ஸ் தொகை செலுத்தாமல், மோட்டார் சைக்கிள் என்று ஏமாற்றி இன்சூரன்ஸ் சான்றிதழ் பெற்று ஏமாற்றுவதும், தற்போது அரங்கேறுவதாக சொல்லப்படுகிறது. விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் இதுபோன்ற மோசமான நிலை நாடு முழுவதும் பரவி வருவதை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றுகண்டுபிடித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பெயரில் சமீப காலத்தில் தமிழகத்தில் மட்டும் 137 போலி இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் போக்குவரத்து போலீசார் மூலம் கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்களாம்.
சென்னை மட்டும் அல்லாமல் கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி போன்ற நகரங்களில் இது தொடர்பாக அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் போலீசில் புகார் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாங்காடு மற்றும் நசரத்பேட்டை போலீஸ் நிலையங்கள் உள்பட 12 போலீஸ் நிலையங்களில் உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசிலும் ஆன்லைன் மூலம் போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற போலி வாகன இன்சூரன்ஸ் சான்றிதழ்களை கோர்ட்டு வாயிலாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டு, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது போன்ற மோசடிகளை கோர்ட்டு மூலம் கண்டுபிடிக்கப்படும்போது, காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது. அதற்குள் இதுபோன்ற மோசடி நபர்கள், தங்களது இருப்பிடத்தை மாற்றியோ அல்லது வேறு வழிகளிலோ தப்பிவிடுவார்கள். எனவே வாகன விபத்து இன்சூரன்ஸ் சான்றிதழ் விசயத்தில் போலீசார் உஷாராகவும், விழிப்போடும் இருக்க வேண்டும்,