பாதாள சாக்கடை திட்டத்தால் கலாட்டா!

பாதாள சாக்கடை திட்டத்தால் கலாட்டா!

கு.அசோக்,

  குடியாத்தம் அரசு மருத்துவமனை எதிரே நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்,பல ஆயிரம் செலவு செய்து கழிவுநீர் காவாய் மீது கடைக்கு செல்வதற்கான வழிகளை அமைத்ததை ஆக்கிரமிப்பு  என்ற பெயரில் அகற்றியதால் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுவதாக கடைக்காரர்கள் வேதனை.

  ஒரு தலைப்பட்சமாக குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக கடைக்காரர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம்நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு கைகலப்பு கடைக்காரர்கள் சாலை மறியல் ஈடுபட்டு காவல்துறையிடம் பேச்சுவார்த்தை.

  வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான கதைகள் உள்ளது.

 இந்த சாலையில் கடைகளுக்கு முன்பே பாதாள சாக்கடை செல்கின்றன.

 ஆகவே அங்கு பொதுமக்கள் சென்று வருவதற்காக பல ஆயிரம் செலவு செய்து வடிவமைத்து பயன்படுத்தி வந்தன.

   இதனால் அவ்வழியாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகம் சில தினங்களுக்கு முன் ஒவ்வொரு கடைக்கும் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

  அதன் அடிப்படையில் மருத்துவமனை சாலையில் நகராட்சி நிர்வாகம் காவல்துறை உதவி உடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு வந்தன.

 இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சில கடைக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதில் கடைக்காரர்களுக்கும் நகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாய் தகராறு திடீரென  தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.

இதனை கண்டித்து கடைக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் ஈடுபட்ட கடைக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.