போலீஸ் அக்கா திட்டம்! பள்ளி கல்லூரிகளில் தொடக்கம்!
ஜி.கே.சேகரன்,
வேலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பள்ளி கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம் - ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார் - காவலர்களின் தொடர்பு எண்ணை மாணவிகள் மாணவர்களும் நேரடியாக புகார் அளிக்கும் வகையில் பள்ளி கல்லூரி அறிவிப்பு பலகை மற்றும் சுற்றுசுவரில் எழுதி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் போலீஸ் அக்கா திட்டம் துவங்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் திரளான காவல்துறையினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திட்டம் மூலம் 290பள்ளிகளுக்கும் தலா ஒரு காவலரை நியமிக்கபட்டுள்ளனர்.
மேலும் 3 பல்கலைக்கழகங்களுக்கு ஒவ்வொரு போலீசாரும், 17கல்லூரிகள் ஆகியவைகளில் பெண் குழந்தைகள் மாணவிகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் அவர்கள் நேரடியாக காவல்துறையில் புகார் அளிக்கும் வகையில் காவலர்கள் பள்ளி கல்லூரிகளில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கபடுவதுடன் போதை பொருட்கள் நடமாட்டத்தையும் தடுத்து மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வழிவகை செய்யும்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில், தமிழக முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு போதை ஒழிப்பிற்காக இந்த திட்டத்தை துவங்கியதை இன்று இம்மாவட்டத்தில் துவங்கியுள்ளோம். இதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கபடும் இன்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை ஆசிரியர்களும் கல்லூரி முதல்வர்களும் காலையில் மாணவர்கள் கூடுகை கூட்டத்தில் அப்பள்ளி கல்லூரிகளில் நியமிக்கபடும் காவலர்களை பேச வைத்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளி கல்லூரி அறிவிப்பு பலகைகள் மற்றும் சுற்றுசுவர்களில் போலீஸ் அக்கா காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் கைபேசி எண்களை எழுதி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பெண் குழந்தைகள் நேரடியாக புகார்கள் அளிக்க முடியும் அவர்களும் பாதுகாப்பாக இருக்கலாம் என பேசினார்.
பள்ளிகளில் தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இதனால் தமிழக அரசு இது போன்ற புகார்களை மாணவிகள் தெரிவிக்கும் வண்ணம் இந்த போலீஸ் அக்கா திட்டத்தை தமிழக அரசு துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தைரியமாக மாணவிகள் புகார் அளிக்க முன் வருவார்கள்.

admin
