பணி கிடைத்த மாணவிகளுக்கு வாழ்த்து சொன்ன அக்சிலியம் கல்லூரி முதல்வர்!

பணி கிடைத்த மாணவிகளுக்கு வாழ்த்து சொன்ன அக்சிலியம் கல்லூரி முதல்வர்!

ஜி.கே.சேகரன்,

அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் கணினி பயின்ற 100 மாணவிகளுக்கு வேலூர் சுற்றுவட்டார நிறுவனங்களிலேயே பணி வழங்கும் விழா நடந்தது -பெண்கள் வேலைவாய்ப்பு என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் கல்லூரி முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி பேச்சு.

 வேலூர்மாவட்டம்,காட்பாடியில் அக்சிலியம் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமானது மூன்று நாட்கள் நடந்தது. சுமார் 40 நிறுவனங்கள் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன.

 இதில்  980 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 700 பேர் முதற்கட்ட தேர்வு நடந்தது. அதில் 100 பேருக்கு பணியாணை வழங்கும் விழா கல்லூரியின் செயலாளர் மேரி ஜோஸ்பின் ராணி தலைமையில் நடைபெற்றது.

 அப்போது கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி 100 மாணவிகளுக்கு வழங்கினார். இந்த பணி ஆணைகள் பெங்களூர் சென்னை அப்பகுதிகள் இல்லாமல் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் பெரிய நிறுவனங்களில் இம்மாணவிகளுக்கு பணி ஆணை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிய ஜெயசீலி பேசுகையில், மாணவிகள் பணிக்கு செல்ல வாழ்த்துக்கள். இது வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கும் நாள் நீங்கள் படிப்பை முடிக்கும் முன்னரே உங்களுக்கு பணி வழங்கபடுகிறது.

  கல்வி என்பது அறிவு மட்டுமல்ல மாறாக ஒரு ஆற்றல் ஆற்றலின் பெருக்கம் நம்மை வலுப்படுத்தவும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அவசியம். குடும்பம், ஊர், நாடு ஆகியவற்றை மேம்படுத்தவும் நாட்டை கட்டமைக்கவும் அறிவு ஆற்றலுடன் வளரவே மாணவிகள் பணி பெரும் வகையில் பணி ஆணைகளை வழங்கியுள்ளோம்.

 இதில் 900 மாணவிகள் நேர்க்கானலில் பங்கேற்று பணி ஆணை பெற்றார்கள் என பேசினார்.