கல்விக் கூடங்களை குறிவைத்து பிஸினஸ் செய்யும் போதை பொருள் வியாபாரிகள்!
ஜி.சாந்தகுமார்,
கல்லூரி மாணவர்களுக்கு மெத்தாம்பெட்டமின் மற்றும் போதை ஊசி விற்று வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ரகசியமாக போதை பொருள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் கல்லூரி சந்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட 6 கிராம் மெத்தாம்பெட்டமின் மற்றும் போதை மருத்து ஏற்றப்பட்ட 36 போதை ஊசிகள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் 3 பேரையும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் கீழ்மலை பகுதியை சோந்த ராம்சந்தர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துரையை சேர்ந்த கார்த்திக் ராஜா, நாகை மாவட்டம் தெத்திசமர்சன் நகரை சேர்நத் முகமது ஜெக்பர் சாதிக் என கூறினர்.
இவர்கள் 3 பேரும் நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு போதை ஊசி மற்றும் மெத்தாம்பெட்டமின் ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தாம்பெட்டமின், 26 போதை ஊசிகள், 3 செல்போன்கள், ரூ.12 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் வேலூர் மாவட்டத்தில் சில கல்வி கூடங்கள் அருகேயும் பல்வேறு இடங்களிலும் சில பல போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

admin
