கடல் அலைகளை மீறி சவுண்டு விட்ட பெண்!... போலீசார் திணறல்!

கடல் அலைகளை மீறி சவுண்டு விட்ட பெண்!... போலீசார் திணறல்!

 ஜி.சாந்தகுமார்,

  நேற்று முன்தினம் இரவு மெரினா முதல் பட்டினப்பாக்கம் வரையிலான கடல் மணல் பரப்பில் ரோந்து போலீஸார் கண்காணித்தனர். அப்போது, கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து இளம் பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை கவனித்த ரோந்து போலீஸாரில் ஒருவர் அவர்களருகே வந்தார். வந்தவர், 'நீங்கள் கணவன் மனைவியா? என கேட்டு விசாரணை நடத்த தொடங்கினார்.

  ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தவாறு, "முதல்ல கணவன், மனைவியான்னு ஏன் சார் கேட்டீங்க? எங்களை ஏன் சார் அப்படி கேட்டீங்க? உங்களுக்கு என்ன தேவை இருக்கு? 2 பேர் உட்கார்ந்திருக்காங்கன்னா, வந்து கணவன் மனைவியான்னுதான் கேட்பீங்களா?

   பீச்சில் யாரும் உட்கார கூடாதா? ஒரு ஆணும், பெண்ணும் உட்கார்ந்திருந்தா கணவன், மனைவியா, லவ்வரா என கேட்பீங்களா? அப்படி கேட்டால் அது அநாகரீகம் சார். பீச்சில் கணவன், மனைவிதான் உட்கார வேண்டும் என்ற சட்டம் கிடையாது.

   ஒரு பெண்ணும், பையனும் உட்கார்ந்திருந்தால் அது கணவன், மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கிடையாது சார் என்று அப்பெண், போலீஸாரிடம் சாவுண்டு விட்டார்.

   இப்படி இருட்டுல உட்காருவது தப்பு என்று போலீஸ்காரர் சொன்னதுமே, "இது இருட்டா சார்?" என செல்போனை வெளிச்சம் நிறைந்திருக்கும் பகுதியை காண்பித்து, அந்த பெண். "நைட் நேரத்தில் எங்கே சார் நாங்கள் உட்கார்திருந்தோம்? இங்கே ஏதாவது அநாகரீகமாக நடந்ததை நீங்க பார்த்தீங்களா?" என்று அந்த பெண் கொந்தளித்தார்.

   இந்த தகவல் வைரலானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை நேரில் அழைத்து போலீஸ் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

  சம்மந்தப்பட்ட பெண்ணையும் அழைத்து விசாரித்து, போலீசாரின் பணிக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும் என அறிவுறுத்தலாமே?